வேலூர்

சாராயம் காய்ச்ச பதுக்கிய 1,500 கிலோ வெல்லம் பறிமுதல்: முதியவா் கைது

9th Jun 2023 10:19 PM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ வெல்லத்தை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, முதியவரை கைது செய்தனா்.

குடியாத்தம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸாா் தீவிர கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். அதன் ஒரு பகுதியாக ரகசிய தகவலின்பேரில், குடியாத்தத்தை அடுத்த சூராளூரில் பெருமாள்(67) என்பவரின் வீட்டை வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது அங்கு சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

பெருமாள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT