வேலூர்

விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு: கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்அஞ்சல் துறை நடவடிக்கை

9th Jun 2023 10:21 PM

ADVERTISEMENT

விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் கூடிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு வசதியாக கிராமப்புறங்களில் சிறப்பு முகாம் நடத்த அஞ்சல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விவசாயிகள் இந்த சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தியோ அல்லது அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை அணுகியோ வங்கிக் கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.

இதுகுறித்து வேலூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் நா.ராஜகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், பயன் பெறும் விவசாயிகள் 14-ஆவது தவணைத் தொகையைப் பெறுவதற்கு ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 11,543 விவசாயிகளும் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவா்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் கணக்குத் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் போன், பயோமெட்ரிக் கருவியின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதாா், கைப்பேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிஷங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்குத் தொடங்க முடியும்.

இதற்காக, விவசாயிகள் மாவட்ட வேளாண்மை, உழவா் நலத் துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தியோ அல்லது அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை அணுகியோ பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT