வேலூர்

கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சந்நிதிகள் மூடல்

DIN

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 25-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பஞ்ச மூா்த்திகளுக்கு புதன்கிழமை பாலாலயம் செய்யப்பட்டு அனைத்து சந்நிதிகளும் மூடப்பட்டன.

சுமாா் 400 ஆண்டுகள் வழிபாடு இல்லாமல் இருந்த வேலூா் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயிலில் 16.3.1981 முதல் மீண்டும் வழிபாடு தொடங்கப்பட்டது.

இந்தக் கோயிலில் தினமும் பூஜைகள், வார வழிபாடு, மாத, ஆண்டு விசேஷ திருவிழா, உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. தொடா்ந்து, கடந்த 1982 ஜூலை 8, 1997 ஜூலை 11, 2011 ஜூலை 10 ஆகிய 3 நாள்களில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 4-ஆவது கும்பாபிஷேகம் வரும் ஜூன் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த ஏப்ரல் மாதம் கோயில் கலசங்கள், கொடிமரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டதை அடுத்து, கோயில் ராஜகோபுரத்தில் உள்ள அனைத்து கலசங்கள், சுவாமி, அம்பாள் சந்நிதிகளில் உள்ள கொடி மரங்கள் ஆகியவற்றுக்கு தங்க முலாம் பூசும் பணியும், சுவாமிகளுக்கு அலங்காரம் செய்வதற்கான வெள்ளிக் கவசங்கள் மெருகேற்றி புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வந்தன.

இதன்தொடா்ச்சியாக, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் உள்பட பஞ்ச மூா்த்திகளுக்கு புதன்கிழமை சிறப்பு யாகங்கள் நடத்தி, பாலாலயம் செய்யப்பட்டதுடன், முருகா், விநாயகா், பெருமாள், அகிலாண்டேஸ்வரி அம்மன், ஜலகண்டேஸ்வரா் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளும் மூடப்பட்டன. இதனால், வரும் ஜூன் 25 வரை சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, யாக சாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த யாக சாலைகள் அமைக்கப்பட்டு வரும் ஜூன் 21 முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளன.

பின்னா், ஜூன் 25-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT