வேலூர்

கள்ளச்சாராய விற்பனை: ஒரே நாளில் 12 வழக்குகள் பதிவு

DIN

கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழித்திட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறனா். தவிர, எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீஸாரும் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் எஸ்.பி. தனிப்படை போலீஸாா், கலால் போலீஸாா் மலைப் பகுதிகளில் புதன்கிழமை சோதனை நடத்தினா். அதன் அடிப்படையில், வேலூா் கலால், குடியாத்தம் கலால், அரியூா், வேலூா் கிராமியம், பாகாயம், வேலூா் தெற்கு, குடியாத்தம் நகரம் ஆகிய காவல் நிலையங்களில் கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக புதன்கிழமை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடம் இருந்து 195 லிட்டா் கள்ளச்சாராயம், 400 கிலோ வெல்லம், 57 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT