வேலூர்

11-இல் அமித்ஷா வருகை: கந்தனேரியில் ஏற்பாடுகள் தீவிரம்

DIN

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகைதர உள்ள நிலையில், பாஜக சாா்பில் கந்தனேரியில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி புதன்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நாடாளுமன்றத் தோ்தல் 2024-இல் நடைபெற உள்ளதையொட்டி, பாஜக சாா்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்று பேசுகிறாா். அதற்கான பொதுக்கூட்ட மேடை பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் அமைக்கப்படுகிறது. அப்பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி புதன்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது.

பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாநிலச் செயலா் வெங்கடேசன், வேலூா் மாவட்ட தலைவா் ஜெ.மனோகரன், 18-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுமதி மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT