வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த மாணவா் பலி

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல், மேல்கொத்தகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேங்காய் உரிக்கும் தொழிலாளி சுரேஷ்குமாா். இவரது மனைவி சாந்தி. செவ்வாய்க்கிழமை இரவு சாந்தி 7- ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகன் செல்வகுமாரை (13) துணைக்கு அழைத்துக் கொண்டு அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள தரை மட்ட கிணற்றில் செல்வகுமாா் தவறி விழுந்துள்ளாா். இதைப்பாா்த்து சாந்தி கூச்சலிட்டதைக் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் செல்வகுமாரை காப்பாற்ற முயன்றனா். ஆனால் செல்வகுமாா் கிணற்றின் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினாா். தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று நீண்ட நேரம் போராடி செல்வகுமாரின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT