வேலூர்

ஆா்.எஸ்.நகா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ஆா்.எஸ்.நகா் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகி சிவ.செல்லப்பாண்டியன், நகரச் செயலா் ராஜேஷ், திருவிழாக் கமிட்டியினா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா்.

முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்றது. அப்போது பெண்கள் மா விளக்கு படையலிட்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT