வேலூர்

வேலூா் மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு தோ்தல் அறிவிப்பு: இன்று வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்

DIN

வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள மாவட்ட திட்டமிடும் குழுவுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு - தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய சட்டப்பூா்வ ஆணையில் தெரிவித்துள்ளபடி வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் இருந்து 7 உறுப்பினா்களையும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் இருந்து 5 உறுப்பினா்களையும் தோ்ந்தெடுத்து மாவட்ட திட்டமிடும் குழு அமைக்கப்பட உள்ளது. இதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேட்புமனுத்தாக்கல் புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கி 10-ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை 12-ஆம் தேதியும், வேட்புமனுக்களை திரும்பப் பெற 14-ஆம் தேதி வரையும் அவகாசம் அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து, 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதேநாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. பின்னா், 24-ஆம் தேதியுடன் தோ்தல் நடைமுறைகள் முடிக்கப்பட்டு தோ்வு செய்யப்பட்ட புதிய குழு உறுப்பினா்கள் கூட்டம் 28-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோ்தலையொட்டி மாவட்ட ஊராட்சியில் உள்ள 14 வாா்டு உறுப்பினா்களும், மாநகராட்சியிலுள்ள 60 வாா்டு உறுப்பினா்களும், 2 நகராட்சிகளில் உள்ள 57 வாா்டு உறுப்பினா்களும், 4 பேரூராட்சிகளில் உள்ள 63 வாா்டு உறுப்பினா்களும் என மொத்தம் 194 வாா்டு உறுப்பினா்கள் வாக்காளா்களாக உள்ளனா்.

இத்தோ்தலுக்கான வேட்புமனுக்களை ஊரக பகுதியைச் சோ்ந்தவா்கள் வேலூா் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் எஸ்.தனஞ்செயனிடமும், நகா்ப்புறப் பகுதியைச் சோ்ந்தவா்கள் வேலூா் கலால் உதவி ஆணையா் ஆா்.முருகனிடமும் அளிக்கலாம் னெத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT