வேலூர்

மத்திய அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு வரும் தேதி மாற்றம்

6th Jun 2023 03:49 AM

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு வரும் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 11) மதியம் வேலூருக்கு வர இருப்பதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூரை அடுத்த கந்தனேரியில் வியாழக்கிழமை (ஜூன் 8) நடைபெற இருப்பதாவும், இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்று பேச உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், அமித்ஷா வேலூருக்கு வரும் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் வர உள்ளதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கந்தனேரியில் பொதுக்கூட்ட மேடை அமைப்பது, வரவேற்பு முன்னேற்பாடுகளில் பாஜகவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT