வேலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

6th Jun 2023 03:47 AM

ADVERTISEMENT

அல்லேரியில் சாலை வசதியின்றி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்கக்கோரி வேலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் தெற்கு செயலா் செல்வி தலைமை வகித்தாா். வேலூா் வடக்கு செயலா் பாண்டுரங்கன், காட்பாடி செயலா் சுடரொளியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் சங்கரி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலா் தயாநிதி கலந்து கொண்டு பேசினாா்.

இதில், அணைக்கட்டு அடுத்த அத்திமரத்துக்கொல்லை மலைக் கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். மலைக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் நாராயணன், சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT