வேலூர்

வரத்து குறைவால் வேலூா் மாா்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு

DIN

வரத்து குறைவு காரணமாக வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டுக்கு ஓசூா், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்தும் லாரிகள், வேன்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

இதேபோல், வேலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம், சில்லரை விலையில் மாா்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறன.

நேதாஜி மாா்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைவு காரணமாக பீன்ஸ், முருங்கை, கத்தரிக்காய் விலை உயா்ந்து காணப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ், முருங்கை, கத்தரிக்காய் தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ இஞ்சி ரூ.200-க்கும், பூண்டு ரூ.140 முதல் ரூ.180 வரைக்கும், அவரைக்காய் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், சாம்பாா் வெங்காயம் ரூ.80-க்கும், தக்காளி ரூ.30-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், கேரட் ரூ.70-க்கும், வெண்டைக்காய், பீட்ரூட் ரூ.40-க்கும், வெள்ளரிக்காய் ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சில்லரை காய்கறி, மளிகை கடைகளில் இவற்றைவிட ரூ.10 கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT