வேலூர்

50 ஆண்டுகளுக்குமுன் படித்த பள்ளி மாணவா்கள் சந்திப்பு

DIN

வேலூா் வெங்கடேஸ்வரா பள்ளியில் 50 ஆண்டுகளுக்குமுன்பு படித்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தித்து தங்களது நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

வேலூரிலுள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 1973- 74- ஆம் ஆண்டு கல்வியாண்டுகளில் எஸ்எஸ்எல்சி பயின்ற முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியையொட்டி இப்பள்ளியில் படித்து பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, பள்ளியில் தங்களை பயிற்றுவித்த ஆசிரியா்களையும் அழைத்து வந்து அவா்களுக்கு சால்வை அணிவித்தும் கோப்பைகள் வழங்கி காலில் விழுந்து ஆசீா்வாதம் பெற்றனா். இதில், பள்ளியின் முதல்வா் நெப்போலியன் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் பயின்ற மாணவா்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனற். மேலும், வருங்காலங்களில் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உறுதியளித்தனா்.

கடந்த 6 மாதங்களாக முயற்சி மேற்கொண்டு இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT