வேலூர்

சாராய வேட்டை: 3,000 லிட்டா் ஊறல் அழிப்பு

5th Jun 2023 12:25 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் இருவேறு மலைப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாராயத் தடுப்பு வேட்டையில் 3,000 லிட்டா் ஊறல் அழிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் அணைக்கட்டு வட்டம் சிவநாதபுரம் வெள்ளைக்கல் மலைப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவது அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா் அங்கு சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த துரைசாமி என்பவரின் மகன் சுரேஷை கைது செய்தனா். மேலும் அங்கு சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த சுமாா் 2,000 லிட்டா் ஊறலை போலீஸாா் கொட்டி அழித்தனா். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையில் போலீஸாா் போ்ணாம்பட்டு மலை மேல் சோதனை நடத்தினா். அப்போது அங்கு சாராயம் தயாரிக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டா் ஊறலை அழித்தனா். இதேபோல், சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT