வேலூர்

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சோ்க்கை: பிசி., எம்பிசி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

5th Jun 2023 12:26 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் சேரத் தகுதியுடைய மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பள்ளி மாணவா்களுக்காக 9 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்காக 3 விடுதிகளும், கல்லூரி மாணவா்கள், மாணவிகளுக்காக தலா 3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டிற்கு மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற உள்ளது. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகள் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவா்கள்.

ADVERTISEMENT

இந்த விடுதிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்குமிடம் மட்டுமின்றி 10-ஆம் வகுப்பு வரை 4 இணை சீருடைகள், 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகள், மலைப்பிரதேச விடுதிகளில் கம்பளி மேலாடைகள் இலவசமாக வழங்கப்படும்.இந்த விடுதிகளில் சோ்ந்திட பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவா் வசிக்கும் இடத்துக்கும் கல்வி நிலையத்துக்கும் 8 கி.மீ. மற்றும் அதற்கு மேல் தூரம் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த தூரம் குறித்த நிபந்தனை கிடையாது.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது காப்பாளினிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை ஜூன் 15-ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT