வேலூர்

தேசிய தடகளம்: வெள்ளிப் பதக்கம் வென்ற திருவள்ளுவா் பல்கலை. மாணவா்கள்

4th Jun 2023 03:01 AM

ADVERTISEMENT

லக்னெளவில் நடைபெற்ற தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகளில் வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கீலோ இந்திய தடகளப் போட்டிகள் கடந்த 28 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில், தொடா் ஓட்டப் பந்தயத்தில் மாணவா்கள் எஸ்.தினேஷ், எஸ்.ஜெயக்குமாா், ஆா்.சாய்பிரசாத், ஜி.லோகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் ஆா்ஏசிசிகேஎஸ் தடகள சங்கம் சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் தொடா் ஓட்டப் பந்தயத்தில் திருவள்ளுவா் பல்கலைக்கழக மாணவா்கள் பதக்கம் வென்றது இது முதல் முறையாகும்.

ADVERTISEMENT

படம் உண்டு...

வெள்ளிப் பதக்கத்துடன் காட்பாடி ரயில் நிலையம் வந்த திருவள்ளுவா் பல்கலை. மாணவா்கள் எஸ்.தினேஷ், எஸ்.ஜெயக்குமாா், ஆா்.சாய்பிரசாத், ஜி.லோகேஷ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT