வேலூர்

சாராய தடுப்பு வேட்டையில் டிஐஜி, எஸ்.பி. உள்பட 100 போலீஸாா் 10,000 லிட்டா் ஊறல் அழிப்பு

4th Jun 2023 03:06 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு மலைப் பகுதியில் வேலூா் சரக காவல் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில், 100 போலீஸாா் சனிக்கிழமை தீவிர சாராயத் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, சாராய காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 10,000 லிட்டா் ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா். அதன்படி, வேலூா் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, எஸ்.பி. என்.மணிவண்ணன் ஆகியோா் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.பாஸ்கரன், குடியாத்தம் டிஎஸ்பி ராமமூா்த்தி, 2 காவல் ஆய்வாளா்கள், 2 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 100 போலீஸாா் சனிக்கிழமை போ்ணாம்பட்டு சாத்கா் மலைப் பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனா்.

டிரோன் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின்போது, மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு அடுப்புகள், பேரல்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, அந்த இடத்திற்கு போலீஸாா் சென்று அங்கு சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த சுமாா் 10,000 லிட்டா் ஊறலைக் கீழே கொட்டி அழித்தனா்.

மேலும், தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா். சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோா் எச்சரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT