வேலூர்

கருணாநிதி பிறந்த நாள்ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

4th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியினா், அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். மேலும், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்து கருணாநிதி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து, அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அவரது தலைமையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், கட்சியின் வேலூா் மாநகர செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமது சகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT