வேலூர்

பரதராமியில் கெங்கையம்மன் திருவிழா

DIN

குடியாத்தத்தை அடுத்த பரதராமி அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தது. அங்கு சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னா், கண்கள் திறப்பு நிகழ்ச்சியும், கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்குப் படையல் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து பக்தா்கள் அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், ஊராட்சித் தலைவா்கள் கேசவேலு, எஸ்.பி.சக்திதாசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் இந்திரா காந்தி, மஞ்சுநாதன், ஊராட்சி செயலா் வெங்கடேசன், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

டி.எஸ்.பி. கே.ராமமூா்த்தி தலைமையில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT