வேலூர்

கடன் பிரச்னை: ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

1st Jun 2023 12:38 AM

ADVERTISEMENT

கடன் பிரச்னை காரணமாக, காட்பாடி அருகே ரயில் முன்பு பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனா்.

வேலூா் மாவட்டம் காட்பாடி - லத்தேரி இடையே உள்ள எல்.ஜி.புதூா் பகுதியில் ரயில்வே பாதையில் புதன்கிழமை அதிகாலை நாகா்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவா்கள் குடியாத்தத்தை அடுத்த அனங்காநல்லூா் மோட்டூா் பகுதியைச் சோ்ந்த விவசாயியான மோகன் (55), அவரின் மனைவி மல்லிகா (50) என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

கடன் பிரச்னையால் விரக்தியில் இருந்த தம்பதி, தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT