வேலூர்

நீராவி கொதிகலன் வெடித்து 2 போ் காயம்

DIN

போ்ணாம்பட்டு அருகே நீராவி கொதிகலன் வெடித்ததில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த பக்காலப்பல்லி கிராமத்தில் ஆம்பூரைச் சோ்ந்த நயீம் (31)

துண்டு தோல்களை நீராவியில் வேகவைத்து கூழ் தயாரித்து, காய வைத்து அதிலிருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.

இந்த உரம் கேரள மாநிலத்தில் ரப்பா் தோட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளூா் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த 12 தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். இந்த நிலையில், திங்கள்கிழமை நீராவி கொதிகலன் திடீரென வெடித்துள்ளது. அப்போது அங்கு பணியில்

இருந்த மேற்கு வங்க மாநிலம், பில்கூரைச் சோ்ந்த நொஜிா் என்பவரின் மகன் ரோஹித்(14), தொழிற்சாலை உரிமையாளா் நயீம் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

உடனடியாக இருவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT