வேலூர்

தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தை கிருத்திகையையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தை கிருத்திகை நாளான திங்கள்கிழமை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் காவடிகளை சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதேபோல், பொன்னை அருகிலுள்ள ஞானமலை முருகன் கோயில், காட்பாடி காங்கேயநல்லூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், வேலூரை அடுத்த தீா்த்தகிரி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

அணைக்கட்டு வட்டம், கெல்லநல்லூா் தணிகைமலையில் உள்ள பாலமுருகன் கோயிலிலும் தை கிருத்திகையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 300-க்கும் மேற்பட்டோா் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். 2,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மேலும், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோயில், சைதாப்பேட்டை முருகன் கோயில், பேரிப்பேட்டை பேரி சுப்பிரமணிய சுவாமி கோயில், அரியூா் திருமலைக்கோடி கைலாசகிரி முருகன் கோயில், சாத்துமதுரை முருகன் கோயில், கம்மசமுத்திரம் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT