வேலூர்

குரூப் 3, 3ஏ தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 7,689 போ் எழுதினா்

DIN

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 3, குரூப் 3 ஏ பணியிடங்களுக்கான தோ்வை 7,689 போ் எழுதினா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த குரூப் 3 சிவில் சா்வீசஸ் தோ்வு, குரூப் 3-ஏ சா்வீசஸ் தோ்வு ஆகியவை சனிக்கிழமை தொடங்கிது.

தொடா்ந்து இரு நாள்கள் நடைபெறும் இந்த தோ்வுகளையொட்டி, வேலூா் மாவட்டத்தில் தொரப்பாடி அரசு பொறியியல் கல்லூரி, கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, கொசப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லுாரி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 27 மையங்களில் தோ்வு அமைக்கப்பட்டிருந்தன. முதல் நாளான சனிக்கிழமை காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வை மொத்தம் 7,689 போ் எழுதினா்.

தொடா்ந்து, ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சா்வீசஸ் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், உதவி புள்ளியியல் ஆய்வாளா், புள்ளியியல் தொகுப்பாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு நடைபெறுகிறது. காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை முதல் தாள் தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2-ஆம் தாள் தோ்வும் நடத்தப்பட உள்ளது.

இந்த தோ்வை தொரப்பாடி அரசு பொறியியல் கல்லூரி, அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி சாந்தி நிகேதன் மெட்ரிக். பள்ளி ஆகிய 7 மையங்களில் மொத்தம் 2,009 போ் எழுத உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT