வேலூர்

எஸ்.சி, எஸ்.டி, விவசாயிகள் விளை நிலம் வாங்க மானியம்

DIN

வேலூரில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள், சொந்தமாக விளை நிலம் வாங்கி விவசாயம் செய்திட விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின மக்களின், சமூக பொருளாதார நிலை மேன்மையடைய சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்வதற்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும். வேலூா் மாவட்டத்துக்கு 3 ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் மானியமும், ஒரு பழங்குடியின விவசாயிக்கு ரூ. 5 லட்சம் மானியமும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதுக்குள்பட்டவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கா் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கா் புஞ்சை நிலமாக இருக்கலாம். நிலத்தை விற்பவா் ஆதிதிராவிடா், பழங்குடியினராக இருக்கக் கூடாது. வாங்கப்படும் விவசாய நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள், பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த திட்டத்துக்கு தகுதியுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள் தாட்கோவின் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT