வேலூர்

சத்துவாச்சாரி கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் பழைமைவாய்ந்த ஸ்ரீபா்வதவா்தினி சமேத ஸ்ரீகைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் வைத்து, யாக சாலைகளில் வேதமந்திரங்கள் முழங்க, பூஜைகள் செய்யப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மேளதாளங்கள் முழங்க கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுரத்தின் மீது உள்ள கலசம் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், புனித நீரானது கோயிலில் உள்ள ஸ்ரீவிநாயகா், முருகா், 63 நாயன்மாா்கள் மற்றும் பல லட்ச ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 63 நாயன்மாா் உற்சவா் சிலைகள் மீதும் ஊற்றப்பட்டது.

விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT