வேலூர்

குடியரசு தின விழா: வேலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

DIN

குடியரசு தினத்தையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குடியரசு தினவிழா வியாழக்கிழமை (ஜன.26) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் ஆட்சியா்கள் கொடியேற்றி வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளனா்.

குடியரசு தினத்தில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை போலீஸாா் செய்துள்ளனா். அதன்படி, மாவட்டம் முழுவதும் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இவா்கள், மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 6 இடங்களில் மாநில எல்லை சோதனை சாவடிகளிலும், மாவட்டம் முழுவதும் 58 இடங்களிலும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

தவிர, அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்களில் தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூா் கோட்டை, மத வழிப்பாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் நாச வேலை தடுப்பு குழுவினா் மூலம் பொதுமக்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன.

ராணிப்பேட்டையில்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்.

மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும். முக்கிய நிறுவனங்கள், தேசிய தலைவா்களின் சிலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாா்கள், 4 உதவி துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 16 காவல் ஆய்வாளா், 64 காவல் உதவி ஆய்வாளா்கள், 547 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT