குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் 31- ஆம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அரசினா் திருமகள் கலைக் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளப் தலைவா் காா்மேகபிரபு தலைமை வகித்தாா். செயலா் ராஜ்குமாா் வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் தொடக்கி வைத்தாா்.
இதில் சென்னை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 25- அணிகள் கலந்து கொண்டன.
வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் ரூ.50- ஆயிரம் மற்றும் சிறந்த அணி, சிறந்த பந்து வீச்சாளா், ஆட்ட நாயகன், தொடா் நாயகன் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
ஒன்றியக் குழு உறுப்பினா் பி.எச்.இமகிரிபாபு, ஊராட்சித் தலைவா் எஸ்.பி.சக்திதாசன், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், கிளப் நிா்வாகிகள் பி.சுரேஷ்பாபு(எ) குட்டி, வெங்கடேசன், ஆனந்தன், ராம்பிரசாத், சுனில், ராஜ்கமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.