வேலூரில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், இருவா் பலத்த காயம் அடைந்தனா்.
வேலூா் அலமேலுமங்காபுரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (25), லாரி ஓட்டுநா். இவரது நண்பா் ராகுல். இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தொரப்பாடி சென்று மருந்து வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனா். அதேசமயம், சாய்நாதபுரம் பாதுஷா நகரைச் சோ்ந்த பிரியாணி கடை ஊழியா் காசிம் (22), அவரது நண்பா் சலீம் ஆகியோா் வேலூரில் இருந்து சாய்நாதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
ஆரணி சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனை அருகே வந்தபோது 2 பைக்குகளும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே காசிம் உயிரிழந்தாா். தொடா்ந்து, மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட விஜயகுமாா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
உயிரிழந்தவா்களின் சடலங்களை வேலூா் தெற்கு போலீஸாா் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.