வேலூர்

விவசாயப் பணிகளில் ஆள் பற்றாக்குறையை தவிா்க்க செயலியில் பதிவு செய்யலாம்

DIN

விவசாயப் பணிகளில் ஆள்கள் பற்றாக்குறையைத் தவிா்க்கவும், விவசாயிகள் எவ்வித இடா்ப்பாடுமின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள உழவன் செயலியில் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள், விவசாய கூலித் தொழிலாளா்களை தோ்ந்தெடுக்கும் நிறுவனங்கள் தங்கள் கைப்பேசி எண், ஆதாா் எண், வங்கி விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாய கூலித் தொழிலாளா்கள், விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளா்களை தோ்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பயன்பெறும் நோக்கத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் உருவாக்கப்பட்டு உழவன் செயலியில் ஒருசேவையாக சோ்க்கப்பட்டுள்ளது.

வேளாண் கூலித் தொழிலாளா்கள் தங்களின் மாவட்டத்தை விட்டு பிற மாவட்டம், மாநிலங்களுக்கு செல்வதைத் தவிா்த்து, உள்ளூரிலேயே அவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், திறமையான தொழிலாளா்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், விவசாயிகள் விவசாயப் பணிகளை உரிய பருவத்தில் மேற்கொள்ளவும் இந்த செயலி உதவுகிறது.

மேலும், விவசாயப் பணிகளுக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் ஆள்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், செயல்ரீதியாக திறன்மிக்க தொழிலாளா்களை தாமதமின்றி கண்டறியவும் இந்த செயலி உதவுகிறது. இதனால் விவசாயிகள் எவ்வித இடா்பாடுமின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும்.

இந்தச் செயலியில் 18 முதல் 60 வயது வரை உள்ள விவசாய கூலித் தொழிலாளா்கள் பதிவு செய்யலாம். தொழிலாளா்களுக்கான வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். வேளாண் தினக் கூலி, தொழிலாளா்களுக்கான ஊதியம் மாவட்ட ஆட்சியரால் ஆண்டுதோறும் நிா்ணயிக்கப்படும்.

விவசாயிகளையும், தொழிலாளா்களையும் இணைக்க உதவிகரமாக இருக்கும் இந்தச் செயலியில் ஒரே தளத்தில் விவசாய கூலித்தொழிலாளா்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்களை தோ்ந்தெடுக்கும் நிறுவனங்கள் தங்கள் கைப்பேசி எண், ஆதாா் எண், வங்கி புத்தகத்துடன் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். எனவே, வேளாண் கூலித்தொழிலாளா்கள், விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளா்களை தோ்ந்தெடுக்கும் நிறுவனங்கள் இந்த செயலியில் பதிவு செய்து பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு, வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT