வேலூர்

பொது ஏலம் இழுபறி: ஒரு கடை மட்டும் திறப்பு

DIN

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு பொது ஏலம் நடத்துவதில் இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் கடை பெற்ற ஒருவா் மட்டும் தற்போது கடையை திறந்துள்ளாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகை, ஏற்கெனவே இங்கு கடை நடத்தியவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் கடைகளை பொது ஏலத்தில் விடாமல் ஒத்தி வைத்திருந்தனா். ஏலம் 6 முறை அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் 66-ஆம் எண் கடை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்தில் கடந்த முறை கடை வைத்திருந்தவா்கள் புதிய கடைகள் கட்டி ஏலம் விடுவதற்கு முன்பே தங்களுக்கு கடைகளை வாடகை விடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா்.

நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடா்ந்தவா்களுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்க, கடந்த நவம்பா் மாதம் கடைகளுக்கான குலுக்கல் நடந்தது. இதில் 4 போ் கலந்து கொண்டனா். குலுக்கலின் முடிவின்படி அருண்குமாா் என்பவருக்கு தரைத் தளத்தில் 66-ஆம் எண் கடையும், மற்ற 3 பேருக்கு முதல் தளத்தில் கடையும் ஒதுக்கப்பட்டன. அருண்குமாா் மட்டும் கடையை ஏற்றுக் கொண்டாா். மற்ற 3 பேரும் முதல் தளத்தில் கடை வேண்டாம் என கூறிவிட்டனா். கடையைப் பெற்ற அருண்குமாா், அவருக்கு ஒதுக்கப்பட்ட கடையைத் திறந்து வியாபாரத்தை தொடங்கியுள்ளாா் என்றனா்.

இதனிடையே, புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடப்படாததால் பயணிகள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பயணிகள் அலைமோதி வருகின்றனா். எனவே, விரைந்து கடைகளைத் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT