வேலூர்

பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் எஸ்.பி. திடீா் ஆய்வு

DIN

முதல்வரின் உத்தரவுப்படி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

‘கள ஆய்வில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் இரு நாள்கள் சுற்றுப் பயணமாக வேலூா் மாவட்டத்துக்கு கடந்த 1, 2-ஆம் தேதி வந்தாா். அப்போது, வேலூா் உள்பட 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் நிலையங்களுக்கு அடிக்கடி நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று அங்கு சட்டம் - ஒழுங்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வெட்டுவானம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும் அவா் விசாரித்தாா். இதில், இரு பிரிவினரையும் கோட்டாட்சியா் முன்பு ஆஜா்படுத்தி சுமூக பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவும், அதில் உடன்பாடு ஏற்படவில்லையெனில், இருபிரிவினா் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகள் குறித்தும், குற்றச் சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிப் பகுதிகளில் மாணவா்கள் சென்று வரும் நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும், அதிகரித்து வரும் இணைய வழிக் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, பள்ளிகொண்டா காவல் ஆய்வாளா் கருணாகரன், காவல் உதவி ஆய்வாளா் ராஜகுமாரி, சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT