வேலூர்

கல்லூரியில் உலக ஈர நில நாள் விழா

DIN

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் உலக ஈர நில நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் பல்வேறு விதமான மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி. சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். கல்லூரியின் சுற்றுச்சூழல் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனா்.

  • வனச் சரக அலுவலா்கள் வினோபா (குடியாத்தம்), சதீஷ்குமாா்(போ்ணாம்பட்டு) ஆகியோா் மேற்பாா்வையில், தண்ணீா் இன்றியும் வளரும் நீா்மத்தி வகை மரக் கன்றுகள், பசுமைமாறாச் செடிகள், பனை, புங்கன், அசோக மரக் கன்றுகள், நீா் நிலைகளில் வளரும் அல்லி, தாமரை உள்ளிட்ட செடிகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT