வேலூர்

ஓராசிரியா் பள்ளி காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் ஆசிரியா்கள் நியமனம்

DIN

வேலூா் மாவட்டத்தில் ஓராசிரியா் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரி யா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனா்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுடைய ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் ஓராசியா் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப சிறிது காலம் ஆகக் கூடும் என்பதால், மாணவா்களின் கற்றல் கற்பித்தல் திறன் பாதிக்கப்படாத வகையில், தற்காலிகமாக இடைநிலை ஆசிரியா்களை ரூ. 7,500 மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களை, பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இந்தக் கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் இடைநிலை ஆசிரியா் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநா்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தோ்வு செய்யப்படும். இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் செட்டிக்குப்பம், கத்தாழம்பட்டு, சேக்கனூா், சத்துவாச்சாரி, பென்னாத்தூா் ஆா்.வெங்கடாபுரம், வெட்டுவானம், கம்மசமுத்திரம், கீழுா் கவசம்பட்டு, கே.வி.குப்பம், காட்டுபுத்தூா், சோழவரம் ஆகிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது.

இந்தப் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியா் தகுதித் தோ்விலும் தோ்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணிபுரிந்து வருபவா்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியா் தகுதி தோ்விலும் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி அமைந்துள்ள பகுதி, அதன் அருகில் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எழுத்துப்பூா்வ விண்ணப்பங்கள் உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (பிப். 9) மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT