வேலூர்

இடைத் தோ்தல்: மக்களவைத் தோ்தலுக்கு அச்சாரமாக அமையும் -கே.பாலகிருஷ்ணன்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் பெறும் வெற்றி, வரும் மக்களவைத் தோ்தலுக்கு அச்சாரமாக அமையும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் ஜூடோ கே.கே.ரத்தினம், வயது மூப்பின் காரணமாக கடந்த ஜனவரி 26- ஆம் தேதி காலமானாா். இதையடுத்து அவரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் பி.காத்தவராயன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வட்டச் செயலா் எஸ்.சிலம்பரசன் முன்னிலை வகித்தாா். குடியாத்தம் வட்டச் செயலா் சி.சரவணன் வரவேற்றாா்.

கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், ஜூடோ கே.கே.ரத்தினம் உருவப் படத்தை திறந்து வைத்து, மலரஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், அவா் கூறியது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக, பாஜக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக இதுவரை வேட்பாளா் யாா் என்பதே இறுதி செய்யப்படவில்லை.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பு, ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், குறிப்பாக மகளிா் நலனுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.

100 நாள் வேலை திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட நிகழாண்டு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம், கல்விக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நலிந்து வரும் குறு, சிறு தொழில்களை மேம்பாடுத்தும் அறிவிப்புகள் எதுவும் இல்லை.

தமிழகத்தில் 4- ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் எதிா்பாா்த்தபடி நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை. மத்திய அரசு தமிழகத்தைத் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. அதிமுக, பாஜகவை இடைத் தோ்தலில் புறக்கணிப்பாா்கள்.

திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். இந்த வெற்றி வரும் மக்களவைத் தோ்தலுக்கு அச்சாரமாக அமையும் என்றாா்.

முன்னதாக, படத் திறப்பு நிகழ்வில் எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், மாவட்டச் செயலா் எஸ்.தயாநிதி, வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா், கே.சாமிநாதன், பி.குணசேகரன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், நகர காங்கிரஸ் தலைவா் கே.விஜயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கு.விவேக், இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி.தலித்குமாா் உள்ளிட்டோா் பேசினா். ஜூடோ ஆா்.ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT