வேலூர்

திருப்பத்தூா் இலக்கியத் திருவிழாசிறைக் கைதிகளுக்காக 1,691 புத்தகங்கள் சேகரிப்பு

DIN

திருப்பத்தூா் இலக்கியத் திருவிழாவில் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறைக் கைதிகளுக்கான புத்தக சேகரிப்பு நிகழ்வில் மொத்தம் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்தில் 1,691 புத்தகங்கள் பெறப்பட்டிருப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகமும், பொது நூலகத் துறையும் இணைந்து புத்தகக் கண்காட்சியுடன் கூடிய இலக்கிய திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

இந்த புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு தலைப்புகளில்பில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

புத்தகக் கண்காட்சியில் வேலூா் மத்திய சிறை, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிளைச் சிறைகள் சாா்பில் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கில் வேலூா் மத்திய சிறைக் கட்டுப்பாட்டிலுள்ள திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் கிளைச் சிறைகளிலுள்ள கைதிகளின் மன மாற்றத்துக்காக நூலகம் அமைக்க புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த அரங்கில் பொதுமக்கள், எழுத்தாளா்கள், சமூக ஆா்வலா்கள் தங்களின் புத்தகங்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இந்த அரங்கில் ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்தில் 1,691 புத்தகங்கள் பெறப்பட்டிருப்பதாகவும், 236 போ் பங்களிப்பு செய்திருப்பதாகவும் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT