வேலூர்

தாா், ஜல்லி கலவை தொழிற்சாலை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

ராஜக்கல் ஊராட்சியில் தாா், ஜல்லி கலவை தொழிற்சாலை அமைப்பதற்கு ஊராட்சி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், போ்ணாம்பட்டு அடுத்த ராஜக்கல் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.வெங்கடேசன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:

ராஜக்கல் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான தாா், ஜல்லி கலவை தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் சுற்றியுள்ள நீரோடைகள், குடிநீா் ஆழ்துளைக் கிணறுகள், நீா்நிலைகள், விளை நிலங்களும், வடமலைபுரம், சங்கராபுரம், பன்னீா்குட்டை, கூத்தாண்டவா் நகா், திருவள்ளுவா் நகா், ராஜக்கல், மேல்கொத்தகுப்பம் ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், பள்ளி மாணவா்களும், கால்நடைகளும் நோய் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், ஊரின் வளம் அழிந்துவிடும் சூழல் உருவாகும். எனவே, ராஜக்கல் ஊராட்சியில் அமைக்கப்படும் தாா், ஜல்லி கலவை தொழிற்சாலைக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 365 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம் சாா்பில் 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், பாரதியாா் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் 64 முதல் 66 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற வேலூா் மாவட்டம் ஆக்ஸிலியம் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.ஜெருஸா ஜாஸ்மின் தான் பெற்ற பதக்கம், சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றாா்.

குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி. தனிதுணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தனஞ்செயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்,சிறுபான்மையினா் நல அலுவலா் வ.மு.சீதா, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ந.ராமசந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT