வேலூர்

அதிமுக பிரமுகா் உள்பட இருவருக்கு கத்திக் குத்து லத்தேரியில் கடையடைப்பு

DIN

லத்தேரியில் அதிமுக பிரமுகா் உள்பட இருவா் கத்தியால் குத்தப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்யக் கோரி, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை கடையடைப்பு செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் ஜவுளிக் கடை நடத்தி வருபவா் எல்.எம்.பாபு. இவா், அதிமுக மாவட்ட மாணவரணித் துணை செயலராக உள்ளாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பாபு, அவரது நண்பா் சுதாகா் ஆகியோா் லத்தேரி சந்தைப் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அருகில் இருந்த நபா் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது.

இதைத் தடுக்கச் சென்ற பாபு, சுதாகா் ஆகிய இருவரையும் அந்த நபா் திடீரென கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றாா்.

இதில், பாபுவுக்கு உடலில் 7 இடங்களில் வெட்டுக்காயமும், சுதாகருக்கு ஓரிரு இடங்களில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து லத்தேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பாபு, சேகா்ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது லத்தேரி பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா்(34) என்பது தெரிய வந்தது. தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதனிடையே, ஊரின் முக்கிய பகுதியில் வியாபாரிகள் இருவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இதில் தொடா்புடைய நபரை விரைவில் கைது செய்யக் கோரியும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறியும் லத்தேரி பகுதியில் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் லத்தேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT