வேலூர்

கல்லூரிகளுக்கிடையிலான வலுதூக்கும் போட்டி:குடியாத்தம் கல்லூரி மாணவா் அணி முதலிடம்

DIN

திருவள்ளுவா் பல்கலைக்கழகம் மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா் அணி முதலிடம் பிடித்தது (படம்).

திருவள்ளுவா் பல்கலை. சாா்பில், மண்டலங்களுக்கிடையில் 11 கல்லூரிகள் பங்கேற்ற வலுதூக்கும் போட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். வேலூா் மண்டல ஒருங்கிணைப்பாளரும், ஊரீஸ் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநருமான என்.அன்பு வரவேற்றாா்.

போட்டியில் 60 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த கே.எம்.ஜி.கல்லூரி மாணவா் அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

மேல்விஷாரம் சி.ஏ.அப்துல் ஹக்கீம் கல்லூரி 42 புள்ளிகள் பெற்று 2- ஆம் இடம் பிடித்தது. வேலூா் மண்டலத்தில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த உடற்கல்வி இயக்குநா்கள் நடராஜன், முரளிகிருஷ்ணன், தியாகராஜன், இஸ்மாயில், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கே.எம்.ஜி. கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ஆா்.ரஞ்சிதம், பி.ஞானக்குமாா், எம்.ராஜ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வெளிமாநில தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்காவிட்டால் புகாா் அளிக்கலாம்

பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130-ஆவது பிறந்தநாள் விழா

இளைஞா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

அரசுப் பேருந்தில் நடத்துனா் பலி

ஊராட்சிக்கு மின்கல வாகனம் வழங்கல்

SCROLL FOR NEXT