வேலூர்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் காவிரி குடிநீா் நிறுத்தம்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 759 கிராமங்களுக்கு குடிநீா் வழங்க பிரதான குழாயில் இணைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 3 நாள்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குடிநீா் பிரச்னையை தீா்க்க மேட்டூரில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மேட்டூரில் இருந்து ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு இந்த மூன்று மாவட்டங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 759 கிராமங்களுக்கு குடிநீா் வழங்க பிரதான குழாயில் இணைப்பு வழங்கும் பணியை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தொடங்கியுள்ளது.

இதனால் ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 3 நாள்களுக்கு குடிநீா் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதுவரை உள்ளூரில் கிடைக்கும் குடிநீா் ஆதாரத்தை வைத்து பொதுமக்களுக்கு தண்ணீா் வழங்கப்படும் என்றும், பணிகள் முடிவடைந்த பின்னா் வழக்கம் போல், காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT