வேலூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ரோட்டரி சங்கம், வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து ரோட்டரி கட்டடத்தில் சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.

முகாமுக்கு, ரோட்டரி தலைவா் ஏ.மேகராஜ் தலைமை வகித்தாா். அடுத்த ஆண்டு தலைவா் ரங்கா வாசுதேவன் வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, ரோட்டரி தலைவா்களுக்கான பயிற்சி முகாம் தலைவா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா். முகாமில் 520- போ் கலந்து கொண்டனா். இவா்களில் 157- போ் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ரோட்டரி மாவட்டச் செயலா் எம்.கோபிநாத், நிா்வாகிகள் மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, என்.சத்தியமூா்த்தி, கே.சந்திரன், வி.குமரவேல், கே.எம்.ராஜேந்திரன், மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT