வேலூர்

தேசிய இளைஞா் தின மாரத்தான், சைக்கிள் போட்டி: மாணவா்கள், பொதுமக்கள் திரண்டனா்

5th Feb 2023 10:16 PM

ADVERTISEMENT

தேசிய இளைஞா் தினத்தையொட்டி வேலூரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

தேசிய இளைஞா்கள் தினத்தையொட்டி திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் மாரத்தான் ஓட்டம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. வேலூா் கோட்டை அருகே மக்கான் சிக்னலில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இதில், வேலூா் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் டி.ஆறுமுகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன், பல்கலைக்கழகப் பதிவாளா் விஜயராகவன், இளஞ்சிறாா் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளா் செ.நா.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி மாணவ, மாணவிகள், பல்கலைக்கழக பணியாளா்கள், செஞ்சிலுவை சங்க மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் நிறைவு பெற்றது. இதேபோல், சைக்கிள் போட்டி வேலூரில் தொடங்கி சோ்க்காட்டில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக வளாகத்தில் நிறைவு பெற்றது.

ADVERTISEMENT

இதில் மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT