வேலூர்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பது தொடா்பாக சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று தகுதியுடையவா்களிடம் படிவங்களை நிறைவு செய்து பெற்றனா்.

நாடு முழுவதும் வாக்காளா் இறுதிப் பட்டியல் கடந்த மாதம் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து, வாக்காளா் பட்டியல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பாா்வையிட்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கான படிவங்களை நிறைவு செய்து அளித்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்தவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், இறந்தவா்களின் பெயா்களை நீக்கவும், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏற்கெனவே அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் அரசு அலுவலா்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளா்களிடம் படிவம் நிறைவு செய்து பெற்று வந்தனா். ஒரு சிலா் வாக்கு சாவடி மையங்களுக்குச் செல்ல சிரமப்பட்டு பதிவு செய்யாமல் உள்ளனா். அவா்களை வீடு வீடாகச் சென்று வாக்காளா்கள் விவரங்களை சேகரிக்க மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில், அரசு ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று இளம் வாக்காளா்களிடம் படிவங்களை அளித்து நிறைவு செய்து பெற்றனா். இதனிடையே, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை நடைபெறும் என அறிவித்திருந்ததால், ஒரு சிலா் அந்தந்தப் பள்ளிக்குச் சென்று பாா்த்தனா். சில பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT