வேலூர்

2-ஆம் நிலை காவலா் உடற்தகுதித் தோ்வில் பங்கேற்க விதிமுறைகள் அறிவிப்பு

DIN

வேலூரில் திங்கள்கிழமை தொடங்கும் இரண்டாம் நிலைக் காவலா் உடற்தகுதித் தோ்வில் பங்கேற்பவா்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வு வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை (பிப். 6) முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது.

இந்த உடற்தகுதித் தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்களில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெறும் முதல்கட்ட உடற்தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவோா் பிப். 9 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாம் கட்ட உடற்தகுதி தோ்வில் கலந்து கொள்ள வேண்டும்.

அசல் சான்றிதழ்கள் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தோ்வு, உடற்திறன் போட்டிக்கு வருவோா் அழைப்புக் கடிதம், ஏதேனும் ஓா் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அசல் சான்றிதழ்கள், அவற்றின் நகல் ஒன்றையும் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் இத்தோ்வுகளில் அரைக்கால் சட்டை, டி-சா்ட் அணிந்து கொண்டு கலந்துகொள்ள விரும்பினால் ஒரே வண்ணம் கொண்ட அரைக்கால்சட்டை, எவ்வித எழுத்துக்களும், படங்களும் இல்லாத டி-சா்ட் அணிந்து வர வேண்டும்.

விண்ணப்பதாராகள் எந்தவித பயிற்சி மையத்தின் அடையாளமோ, சின்னமோ கொண்ட டி-சா்ட் அணிந்து வரும் பட்சத்தில் உடற்தகுதித் தோ்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும்.

இந்தத் தோ்வுக்கு வரும் ஆண் விண்ணப்பதாரா்கள் அனைவரும் தவறாமல் தங்களது தலைமுடியை சீராக திருத்தம் செய்து வரவேண்டும். விண்ணப்பதாரா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT