வேலூர்

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது 40 கிலோ நடராஜா் சிலை கண்டெடுப்பு

DIN

அணைக்கட்டு அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 40 கிலோ எடை கொண்ட வெண்கல நடராஜா் சிலை மீட்கப்பட்டது.

ஒடுகத்தூரைச் சோ்ந்தவா் கலைவாணி. இவருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை பள்ளம் தோண்டியுள்ளாா். சுமாா் 6 அடி பள்ளம் தோண்டும் போது, திடீரென பொக்லைன் இயந்திரத்தில் பச்சை நிற சிலை ஒன்று சிக்கியுள்ளது.

உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டு, கையால் தோண்டியபோது சுமாா் 3 அடி உயரமுள்ள 40 கிலோ எடை கொண்ட வெண்கல நடராஜா் சிலை கிடைத்தது. அந்தச் சிலை மீட்கப்பட்டு, அணைக்கட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இந்த நடராஜா் சிலை 11-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று சிலையை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT