வேலூர்

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்: முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை

DIN

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வேலூா் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‘கள ஆய்வில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா். முதல் நாளான புதன்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முக்கிய பிரமுகா்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் உதயகுமாா், மாவட்டத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் முதல்வரிடம் அளித்த மனு:

விவசாய நிதிநிலைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆகியவற்றை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்.

கூட்டுறவு, அரசு சா்க்கரை ஆலைகளை நஷ்டத்தில் இருந்து மீட்க மொலாசஸில் இருந்து எத்தனால் தயாரிக்க ஆவன செய்ய வேண்டும். வேளாண்மைக்கு உலா் களங்கள் அமைக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். அண்டை மாநிலங்களைப் போல், ஏக்கருக்கு ரூ.20,000 உற்பத்தி மானியம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

குறு, சிறு தொழில் முனைவோா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் வி.சுவாமிநாதன் அளித்த மனுவில், வேலூா் காந்தி நகரிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

வேலை வாய்ப்பை அதிகரிக்க கூடுதலாக புதிய சிட்கோ தொழிற்பேட்டையை ஏற்படுத்த வேண்டும்.

தேனீ வளா்ப்பு மற்றும் தேன் பிரித்தெடுக்கும் அலகு ஒன்றை மாவட்ட தொழில் மையம் மூலம் அமைக்க வேண்டும்.

மத்திய அரசு வழங்கும் மின்னணு மேம்பாட்டு நிதியை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு எலக்ட்ரானிக் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். ஏற்றுமதி ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான கடனை ரூ.50 லட்சம் வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் வழங்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோா் நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT