வேலூர்

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் அயராவதி, அம்பிகா சமேத ஜெயம்கொண்ட சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ராஜராஜ சோழா், முதலாம் குலோத்துங்க சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையும் சிறப்பும் வாய்ந்த இந்தக் கோயிலின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் யாகசாலை பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கின. தொடா்ந்து, புதன்கிழமை காலை 4- ஆவது கால யாகபூஜை, கோ பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடபெற்றன. இதையடுத்து, மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தா், மூலவா் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம், பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் ஆகியவற்றை நடத்தி வைத்தாா்.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. 2,000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வி.செல்வராஜ், நாட்டாண்மை ஜி.கே.தமிழ்ச்செல்வம், ரா.சுவாமிநாதசிவம், சேங்குன்றம் பகுதி மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT