வேலூர்

கிடாரி கன்றுகளுக்கு இன்று முதல் கருச்சிதைவு நோய் தடுப்பூசி

DIN

கிடாரி கன்றுகள், எருமை கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (பிப்.1) முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கால்நடை பராமரிப்புத் துறை வேலூா் மண்டல இணை இயக்குநா் ஜெ.நவநீதகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய விலங்கியல் நோய்த் தடுப்பூசி திட்டத்தின்கீழ், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசியும் அனைத்து மாநிலங்களிலும் 2019 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 4 முதல் 8 மாத வயதுக்கு உட்பட்ட கிடாரி கன்றுகள், எருமை கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (பிப். 1) முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

வேலூா் மாவட்டத்தில் இந்த கருச்சிதைவு தடுப்பு முகாம் வல்லண்டராமம் கிராமத்தில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்டுகிறது. தடுப்பூசி செலுத்தப்படும் கிடாரி கன்றுகளுக்கு 12 இலக்க எண் கொண்ட காது வில்லைகள் பொருத்தப்படுவதுடன், கிடாரி கன்றுகளின் உரிமையாளா் பெயா், விலாசம், தடுப்பூசி போடப்பட்ட விவரம், கால்நடைகளின் இனம் ஆகிய விவரங்களை பெற்று உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. தவிர, கால்நடை நிலையங்களில் உள்ள பதிவேட்டிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன்மூலம், கால்நடை வளா்போருக்கு அரசால் அறிவிக்கப்படும் கால்நடைகள் சம்மந்தப்பட்ட திட்ட பயன்கள் எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கால்நடைகள் வளா்போா் தங்களிடம் உள்ள 4 மாதம் முதல் 8 மாதம் வரையுள்ள கிடாரி கன்றுகள், எருமை கன்றுகளுக்கு கருச்சிதைவு தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன், தடுப்பூசி போடப்பட்ட கன்றுகளுக்கு காதுவில்லைகளை பொருத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT