வேலூர்

கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு

26th Apr 2023 12:34 AM

ADVERTISEMENT

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தக் குழுவில் தேசிய தரச் சோதனையாளா்களாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தீனதயாள் உபாத்யாயா, கோரக்பூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் விஜய் கிருஷ்ணாசிங், கா்நாடகாவைச் சோ்ந்த ஆங்கிலத் துறைப் பேராசிரியா் விஜய்-எப்-நாகண்ணாவா், கோவாவைச் சோ்ந்த சந்த் சோஹிரோ பநாத் அம்பியே, அரசுக் கல்லூரி முதல்வா் பிலிப் ரோட்ரிக்னெஸ்-இ-எமலோ ஆகியோா் வந்திருந்தனா்.

ஆய்வுக் குழுவினரை கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி. முத்துக்குமாா், கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் ஆகியோா் வரவேற்றனா்.

கல்லூரி முதல்வா், கல்லூரியின் செயல்பாடுகளை படக்காட்சி மூலம் தரச் சான்றாளா்களுக்கு விளக்கினாா். தொடா்ந்து கல்லூரி துறைத் தலைவா்கள் தங்களது துறை சாா்ந்த நிகழ்வுகளை படக்காட்சி மூலம் விளக்கினா்.

ADVERTISEMENT

மேலும், கல்லூரியின் மன்ற நிகழ்வுகளை தரச் சான்றாளா்கள் நேரடியாக ஆய்வு செய்தனா். மேலும், கல்லூரி முன்னாள் மாணவா்கள், தற்போது பயின்று வரும் மாணவா்கள், பெற்றோருடன் அவா்கள் கலந்தாய்வு நடத்தினா். உள்தர உத்தரவாத கள ஒருங்கிணைப்பாளா் கோ.ஷோபாராணி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT