வேலூர்

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: பேராசிரியா்களுக்கு பாராட்டு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோயம்புத்தூா் ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் குருஷேத்திரா 2.0 எனும் பெயரில் நடைபெற்ற பேராசிரியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில்சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியா்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

கைப்பந்து மற்றும் இறகுப் பந்து போட்டிகளில் கே.எம்.ஜி. கல்லூரி பேராசிரியா்கள் சிறப்பாக விளையாடி பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனா். போட்டிகளில் பங்கேற்ற பேராசிரியா்கள் பி.ஞானக்குமாா், எம்.ராஜ்குமாா், என்.எஸ்.சுந்தரமூா்த்தி, எம்.சக்திவேல், வி.விஜய், எம்.சுரேஷ், கே.கௌதம்ராஜன், எம்.அருள், எம்.ராஜா, எம்.தினகரன் ஆகியோரை கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT