வேலூர்

சிஐஎஸ்எப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) உள்ள காலி பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) காலியாக உள்ள 122 உதவி ஆய்வாளா் (ஸ்டெனோகிராபா்), 418 தலைமைக் காவலா் (அமைச்சகம்) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற முன்னாள் படை வீரா்கள் அக்டோபா் 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பித்த விவரத்தை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT