வேலூர்

ஆற்றுப்படுத்துதல் சேவைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் அரசினா் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள சிறுவா், சிறுமிகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்கத் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூா், திருச்சி, சேலம், கடலூா், மதுரை, கோவை ஆகிய 8 இடங்களில் அரசினா் கூா்நோக்கு இல்லங்களும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இரு இடங்களில் அரசினா் சிறப்பு இல்லங்களும் இயங்குகின்றன.

இவற்றில் தங்கியுள்ள சிறுவா், சிறுமிகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வேலூா் அரசினா் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுவா், சிறுமிகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்தப் பதவிக்கான விண்ணப்பம், தகவல்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் இணையத்தில் (ட்ற்ற்ல்:/ஸ்ங்ப்ப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளின் நகலுடன் அக்டோபா் 12-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நன்னடத்தை அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை, (சுற்றுலா மாளிகை எதிரில்) வேலூா் - 632 001. தொலைபேசி எண் 0416 - 2222310 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு பெறப்படும், முழுமையாக பூா்த்தி செய்யப்படாத, உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் முன்தகவல் இன்றி நிராகரிக்கப்படும். தகுதியானவா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல், ஆற்றுப்படுத்தல் வல்லுநா்கள் கொண்ட தோ்வுக்குழு மூலம் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தகுதியான நபா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தோ்வு செய்யப்படும் உளவியல் ஆற்றுப்படுத்துநா்களுக்கு வாரம் ஒருமுறை வீதம் ஒரு வருடத்துக்கு 60 நாள்களுக்கு மிகாமல் பணி வழங்கப்படும். இவா்களுக்கு ஒரு வருகைக்குப் போக்குவரத்து செலவு உள்பட ரூ. 1,000 மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வேலூா் மாவட்ட நன்னடத்தை அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT